வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய பயணிகள்
பாலத்தில் சிக்கிய அரசுப்பேருந்து.
வடகிழக்கு பருவமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக நெல் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நள்ளிரவு முதல் கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலகம், பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே அத்திப்பாடி கிராமத்தில் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊத்தங்கரையிலிருந்து நீப்பத்துறை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் முழ்கியுள்ளது.
இந்நிலையில் ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் இருந்து 15 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு நகர் பேருந்து நீப்பத்துறைக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தை கடந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாடு இழந்து வெள்ளத்தி சிக்கியது. இதில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிரி தப்பினர். உடனடியாக பேருந்து நடத்துனர் பயணிகள் பாத்திரமாக பேருந்து பின்புற வழியாக மீட்டுள்ளனர்.
மேலும் பேருந்து மீட்டுக்கும் பணி நடந்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu