மா ஒட்டு செடி வளர்ப்பில் விவசாயிகள் தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர், போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் நீலம், பெங்களூரா, நடுச்சாலை, செந்தூரா, ஹிமாயூதனி, காலேபாடு, ருமானி, மல்கோவா, பையூர்&1, அல்போன்சா, சிந்து, பெரியகுளம் &1, மல்லிகா, அமரப்பால, மஞ்சிரா, அர்கா அருணா, அர்கா புனீத், அர்கா நீல்கிரன் உள்ளிட்ட வகையான மாங்கன்றுகள் ஒட்டுச்செடி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் மட்டும் சுமார் 7,500 ஏக்கர் பரப்பளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒட்டு செடி மூலம் மாங்கன்றகள் வளர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட மாங்கன்றுகள், போதிய மழை இல்லாமலும், பருவ நிலை மாற்றத்தாலும் வளராமல் அழிந்துவிட்டது. தற்போது தென்மேற்க பருவமழை துவங்க உள்ளதால், மேட்டூர் அைணியல் நீர் திறந்துள்ளதாலும் புதிய மாங்கன்றுகள் நடுதல், அழிந்துவிட்ட மாங்கன்றுகளை பிடுங்கிவிட்டு புதிய கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் ஒரு கன்று ரூ.70 முதல் ரூ.110 வரை விற்பனையான மாங்கன்றுகள்,. தற்போது ரூ.200 வரை விற்பனையாகிறது. சிறிய நாற்றுகளின் விலையே ரு.65 முதல் ரூ.70 வரை விலை உயர்ந்துள்ளது. அவற்றை வளர்த்து மாங்கன்றுகளாக விற்பனை செய்யும் போது, ஒரு மாங்கன்றின் விலை ரூ.250க்கும் அதிகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் மா ஒட்டுச்செடி வளர்ப்பில் விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu