சிறுநீரக பாதிப்பால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

சிறுநீரக பாதிப்பால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X
சிங்காரப்பேட்டை அருகே சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காமாட்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகுணா என்பவருடன் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் திருப்பத்தூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாகாததால் மனமுடைந்து, இன்று மாலை அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story