மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்து கர்ப்பம்: மர்ம ஆசாமிக்கு வலை

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்து கர்ப்பம்: மர்ம ஆசாமிக்கு வலை
X
ஊத்தங்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த நபரை, போலீசார் தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் வழக்கமாக ஆடுகளை மேய்க்க செல்வது வழக்கம்.

கடந்த 5 மாதத்திற்கு முன்பு இவர் ஆடுகளை மேய்க்க சென்ற போது மர்மநபர், இவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். இதில், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து, அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை