தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு
ஊத்தங்கரை பகுதியில், கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்ட தெருக்கூத்து கலைஞர்களை போலீசார் பாராட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல்துறையின் சார்பில், காவல் ஆய்வாளர் முத்தமிழ்செல்வன் அறிவுறுத்தலின்படி, கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கல்லாவி தெருக்கூத்து கலைஞர்கள் மூலமாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நாடகத்தில், அசுரன் வேடம் மற்றும் எமதர்மன் வேடம் அணிந்து, கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தெருக்கூத்து பாடல்கள் மூலமாக, விலகி இருப்போம், வீட்டில் இருப்போம், கைகழுவுவோம், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும்; தேவையின்றி வெளியே வரக்கூடாது எனவும் பாடல்கள் மூலமாக கூறினர்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய சூழலில் நம்மை நம்மால் மட்டுமே காப்பாற்றிக் கொள்ள முடியும். அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று, நாடகக் கலைஞர்கள் கூறினர். காவல்துறையின் சார்பில் இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu