கிருஷ்ணகிரி அணையில் தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை
கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2021&22ம் ஆண்டு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில், நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண்மை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு வரும் 26 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது. தென்பெண்ணை ஆற்றின் இணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கில் கர்நாடகா மாநிலம் யார்கோள் என்ற இடத்தில் அணை கட்டியதற்கு விவசாயிகள் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்வது.
இந்த அணை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியறுத்துவது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பெண்ணையாறு பாசன பகுதிகளும் பாதிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி அணையில் உள்ள தண்ணீர் பாசனத்திற்கு தொடர்ந்து 51 நாட்களுக்கு மட்டுமே தற்போது இருப்பு உள்ளது. எனினும் மீதமுள்ள நாட்களுக்கு தற்போது அணைக்கு வரும் நீர்வரத்து மற்றும் எதிர் வரும் மழை நீரைக் கொண்டு சரி செய்யலாம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், 16 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu