கல்லாவி அருகே பருத்தி செடியில் ஊடுபயிராக கஞ்சா பயிர்: விவசாயி கைது

கல்லாவி அருகே பருத்தி செடியில் ஊடுபயிராக கஞ்சா பயிர்: விவசாயி கைது
X

கைதான விவசாயி மாதேஷ்.

ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே பருத்தி செடியில் ஊடுபயிராக கஞ்சா வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகொட்டகுளம் பகுதியில் உள்ளது வைரம்பட்டி கிராமம். இங்கு பருத்திச் செடியின் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் மற்றும் கல்லாவி ஆய்வாளர் பத்மாவதி நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொண்ணா கவுண்டர் என்பவரின் மகன் மாதேஷ் (வயது 66) பருத்திச் செடியின் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வருவது தெரியவந்தது.

இதனையடுத்து, மாதேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது மேலும் வளர்த்து வந்த கஞ்சா செடிகளையும் அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் சட்டவிரோதமாக கச்சா விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்த மாதேஷ் என்பவரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரை சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!