பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில்  கலெக்டர் நேரில் ஆய்வு
X

பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி. 

கிருஷ்ணகிரி பையூரில் ஜீனூர் தோட்டக்கலை கல்லூரி தொடங்குதவற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் நேரில் இன்று ஆய்வு செய்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் துவங்கப்படும் என அறிவித்தார். கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நவம்பர் 2021 முதல் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தற்காலிகமாக நடைபெறும். இந்த கல்லூரியில் வருகிற நவம்பர் மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

கல்லூரி செயல்படுவதற்கு தேவையான நிர்வாக அலுவலகம், வகுப்பறை, ஆய்வுக் கூடங்கள், உணவுக் கூடம், மாணவ, மாணவியர் தங்கும் விடுதி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாடங்கள் குறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி இன்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது, தற்காலிகமாக கல்லூரி செயல்படுவதற்கு தேவையான உபகரணங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின் போது, தோட்டக்கலை கல்லூரி நிர்வாக அலுவலர் ஜீவஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பரசுராமன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!