சந்தூர், பர்கூர், ஜெகதேவி முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை விழா நாளை ரத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர், பர்கூர், ஜெகதேவி முருகன் கோவில்களில் நாளை (2ம் தேதி) ஆடிக்கிருத்திகை விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தூர் மாங்கனி வேல்முருகன் கோவில், பர்கூர் பாலமுருகன், ஜெகதேவி பாலமுருகன் கோவில்களின் செயல் அலுவலர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூரில் மாங்கனி வேல்முருகன் கோவில் உள்ளது. அதே போல பர்கூரில் பாலமுருகன் கோவிலும், ஜெகதேவியில் பாலமுருகன் கோவிலும் உள்ளது. இந்த கோவில்கள் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் ஆகும்.
இந்த கோவில்களில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அலகு குத்துதல், காவடி எடுத்தல், அபிஷேகம் செய்தல், பொங்கல் வைத்தால், அங்கபிரதட்சணம் செய்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் பக்தர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஆடிக்கிருத்திகை திருவிழா நாளை (சும் தேதி) தமிழக அரசின் உத்தரவுப்படி ரத்து செய்யப்படுகிறது. அலகு குத்துதல், காவடி எடுத்தல், அபிஷேகம் செய்தல், பொங்கல் வைத்தல், அங்கபிரதட்சணம் செய்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் ரத்து செய்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, சாமி தரிசனம் செய்யும் போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். 6 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu