விபத்தில் சிக்கியவர்கள் உடனடி மீட்பு: எஸ்.ஐ., காவலர்களுக்கு குவியும் பாராட்டு

விபத்தில் சிக்கியவர்கள் உடனடி மீட்பு: எஸ்.ஐ., காவலர்களுக்கு குவியும் பாராட்டு
X
ஊத்தங்கரையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுதித்த எஸ்.ஐ., ரவி மற்றும் காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை குற்றப்பிரிவு எஸ்ஐ ரவி தலைமையில் போலீசார் ஊத்தங்கரையில் இருந்து சிங்காரப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மிட்டப்பள்ளி அருகே அதிகளவில் கூட்டம் இருந்தது விசாரணை மேற்கொண்டபோது, சிங்காரப்பேட்டை மில் இருந்து பெருமாள்நாயக்கன்பட்டி க்கு சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மற்றும் குழந்தை மூவரும் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் மனைவிக்கு பலத்த காயம் தலையில் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.

சுற்றியிருந்த பொதுமக்கள் முதலுதவி செய்து கொண்டிருந்த நிலையில், சற்றும் சிந்திக்காமல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ் ஐ ரவி மற்றும் காவலர்கள் பிரபாகரன், அதியமான், சரவணன், அன்பழகன், மகேந்திரன் தங்களது டெம்போ வாகனத்தில் ஏற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்த துரித நடவடிக்கையால் தற்போது காப்பாற்றப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நல்லமுறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த செய்தியை அறிந்த பொதுமக்கள் ஊத்தங்கரை காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!