ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் நிரம்பிய 600 கேன்கள்.

ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சரக்கு லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தடுத்து நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர்.

அப்போது டாரஸ் லாரி முழுவதும் தனித்தனியாக பெட்டிகளில், பார்சல் செய்யப்பட்ட 35 லிட்டர் அளவு கொண்ட 600 கேன்களில், 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலேந்திரசிங்(33). என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. சுப்புலட்சுமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் ஓசூர் கலால் பிரிவு டிஎஸ்பி சிவலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!