tomato price today-என்னது..? தக்காளி ஐம்பது ரூபாய்க்கா..? இது நாச்சிக்குப்பம் அதிசயம்..!

tomato price today-என்னது..? தக்காளி ஐம்பது ரூபாய்க்கா..? இது நாச்சிக்குப்பம் அதிசயம்..!
X

தக்காளி விலை (கோப்பு படம்)

நாச்சிகுப்பத்தில் ஒரு கிலோ தக்காளியை ரூ.50-க்கு விற்ற வியாபாரிகள். பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்

tomato sales for RS.50 in veppanahalli, Krishnagiri news today, tomato price today, tomato price hike,

தற்போதைய ஹாட் டாபிக்கே தக்காளிதான். இன்னிக்கு நாடு முழுவதும், தக்காளிதான் ஹீரோ. அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள், சாதாரண மக்கள் வரை தக்காளியைப்பற்றி பேசாதோர் யார்தான் உள்ளனர்?

ஏனெனில் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பரபரப்பான நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில வியாபாரிகள் தக்காளியை கிலோ ஒன்று ரூ.50க்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைப்பற்றி பார்ப்போம் வாங்க.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில் கால நிலை மாற்றம் மற்றும் தொடர் மழை காரணமாக விற்பனைக்கு வரும் தக்காளி கணிசமாக குறைந்து போனது. இதனால், நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. பெரிய நகரங்களில் தக்காளி கிலோ ஒன்று ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.


இந்த நிலையில் வேப்பனப்பள்ளி பகுதியில் தக்காளி சாகுபடி செய்திருப்பதால் ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையும், 15 கிலோ கொண்ட கூடை ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வேப்பனப்பள்ளி அருகே நாச்சிகுப்பம் பகுதிக்கு ஆட்டோக்களில் வந்த சில வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.50-க்கு விற்றனர்.

பாதிக்கு பாதி விலையா..? இதனை அறிந்த பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கிச் சென்றனர். ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நாச்சிகுப்பம் பகுதியில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்ற சம்பவம் மற்ற வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைண்ட் வாய்ஸ் : ஒருவேளை இந்த தக்காளியை திருடிக் கொண்டு வந்து விற்பனை செய்கிறார்களோ..?என்று அப்பகுதி வியாபாரிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனராம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!