சிறுமியை மிரட்டி பலாத்காரம்; தொழிலாளிக்கு போலீஸ் வலை

சிறுமியை மிரட்டி பலாத்காரம்;   தொழிலாளிக்கு போலீஸ் வலை
X
சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தொழிலாளியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியை சேர்நத்வர் மாதப்பன் (வயது 26). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், இவர் கட்டிட வேலை செய்வதற்காக அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு 16 வயதுடைய சிறுமியை மிரட்டி பல முறை மபாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், கர்ப்பமான அந்த சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை பெற்றோர் கண்டுபிடித்தனர். அவரிடம் கேட்ட போது கட்டிட தொழிலாளி மாதப்பன் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதையடுத்து, சிறுமியின் சார்பில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் விசாரித்து மாதப்பன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை