கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவிற்கு கடத்த இருந்த   ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை, வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை, வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ. சிவராஜ் மற்றும் போலீசார், தொட்டிநாயக்கனப்பள்ளி கூட் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு பிக்அப்-ஐ போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர் நிற்காமல் வேனை தூரமாக சென்று நிறுத்தி விட்டு அருகில் உள்ள மலைக்கு தப்பி ஓடி விட்டார்.

உடனே, போலீசார் அந்த வண்டியை சோதனை செய்த போது, அதில், 1,000 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த அரிசி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்