9 கிலோ வெள்ளி பறிமுதல்

9 கிலோ வெள்ளி பறிமுதல்
X
தளி அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 9 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 66 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் கூட்டுரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மத்திகிரி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் காரில் 66 ஆயிரத்து 210 ரூபாய் பணம் மற்றும் 9 கிலோ வெள்ளி வளையல்கள் மற்றும் செயின்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. பணம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அனைத்தையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!