ஜாமீனில் வந்த ரவுடி வெட்டிக்கொலை - 3 கொலை வழக்கில் தொடர்புடையவர்

X
கொலை செய்யப்பட்டு கிடக்கும் உதயகுமார்; அருகில் அவரது கார்.
By - K.Rajeshwari,Reporter |30 Jun 2021 8:30 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே காரில் வந்த பிரபல ரவுடியை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள கும்ளாபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் மகன் உதயகுமார் (30). இவர் மீது கர்நாடக மாநிலத்தில் 3 கொலை வழக்குகள் உள்ளன. தேன்கனிக்கோட்டையிலும் வழிப்பறி வழக்கு உள்ளது; குண்டர் சட்டத்திலும் சிறையில் இருந்தவர். கொலை வழக்குகளில் இருந்து ஜாமீனில் வந்த உதயகுமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு உதயகுமார், காரில் கும்ளாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த ஒரு கும்பல், கவுரம்மா கோவில் அருகே, காரை வழிமறித்து உதயகுமாஐ அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், சம்பவ இடத்திலேயே உதயகுமார் இறந்தார்.
தகவல் அறிந்து, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று, உதயகுமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்து, தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று, உதயகுமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உதயகுமார் தொடர்புடைய கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu