இந்திய விடுதலை போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு சின்னங்கள் மணிகூண்டு திறப்பு

இந்திய விடுதலை போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு சின்னங்கள் மணிகூண்டு திறப்பு
X

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டையில் புதுப்பிக்கப்பட்ட தியாகிகள் நினைவு சின்னம், மணிகூண்டை ஆட்சியர் திறந்து வைத்தார்

தேன்கனிகோட்டையில் புதுப்பிக்கப்பட்ட சுதந்திர போராட்டத் தியாகிகள் நினைவு சின்னம், மணிகூண்டை ஆட்சியர் திறந்து வைத்தார்

தேன்கனிகோட்டையில் இந்திய விடுதலை போரில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவு சின்னங்கள் மற்றும் மணிகூண்டு திறப்பு : மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

தேன்ககனிகோட்டை பழைய பேருந்துநிலையத்தில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய விடுதலை போரில் பங்குபெற்று உயிர்நீத்த தியாகிகளின் நினைவு சின்னங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட மணிகூண் டை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயச்சந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்.

தேன்கனிகோட்டை பழைய பேருந்துநிலையத்தில் நூற்றாண்டுகால பழமையான மணிகூண்டு இடிந்து சிதிலமடைந்து காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இந்த மணிகூண்டை மருத்துவர் சுப்பிரமணியன், மருத்துவர் சச்சரிதா மற்றும் தேன்கனிகோட்டை அசோகா மருத்துவமனை நிர்வாகத்தினர் சார்பில் கடந்த 3 ஆண்டுகாலமாக புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த மணிகூண்டில் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று உயிர்நீத்த தியாகிகள் காந்தியடிகள், வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோரின் நினைவு சின்னங்கள் பொறிக்கப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட மணிகூண்டுவின் திறப்பு விழா 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயச்சந்திரபானு ரெட்டி மணிகூண்டுவை திறந்து வைத்தார். இந்த விழாவில் தேன்கனிகோட்டை நகர பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!