பணத்தை திருப்பி கேட்ட வேன் டிரைவருக்கு அடி, உதை : ஒருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்,கெலமங்கலம் அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட வேன் டிரைவரை சரிமாரியாக தாக்கிய தனியார் கம்பெனி ஊழியரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கணேசா காலனியை சேர்ந்தவர் சரவணன், வேன் டிரைவர். இவரிடம் அதே பதியில் உள்ள துளசி நகரை சேர்ந்த தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரியும் நந்தீஸ்குமார் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.
ஆனால் பலமுறை கேட்டும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்நிலையில் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பணம் கொடுக்க மறுத்ததுடன், ஆபாச வார்த்தையால் பேசி, அங்கிருந்த மரக்கட்டையால் சரவணனை, நந்தீஸ்குமார் மற்றும் அவரது நண்பரான அண்ணா நகரை சேர்ந்த அஜீத் ஆகியோர் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைநத சரவணன், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், கெலமங்கலம் போலீஸ் எஸ்.ஐ பார்த்தீபன் வழக்கு பதிவு செய்து, நந்தீஸ்குமாரை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள அஜீத்தை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu