கெலமங்கலம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்தல் - வாலிபர் கைது

கெலமங்கலம் அருகே  2 டன் ரேஷன் அரிசி கடத்தல் - வாலிபர் கைது
X
கெலமங்கலம் அருகே, 2 டன் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருவதாக, மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐக்கள் சிவசாமி, தென்னரசு ஆகியோர் கெலங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, கெலமங்கலம் பகுதியில் சென்ற, ஒரு பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அந்த ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கே.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார்(27) என்பதும், அவர் ராயக்கோட்டை, நெல்லூர் பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு எடுத்து சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil