தேன்கனிக்கோட்டை சரகத்தில் 3 நாட்களில் 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை சரகத்தில் 3 நாட்களில் 29 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
X

தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில் பறிமுதல் செய்த 29 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கைதானவர்களுடன் போலீசார்.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சரக காவல் கோட்டத்தில், 3 நாட்களில் 29 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனை ஒப்படைக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் சிலர், நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்காமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் கடந்த 3 நாட்களில் இதுவரை 29 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாரின் நடவடிக்கைக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், தனிப்படை போலீசாரை நேரில் சந்தித்த அவர், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். பின் பேசிய எஸ்.பி சாய்சரண், நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்போர் உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினார்.

Tags

Next Story
why is ai important to the future