தேன்கனிகோட்டையை சேர்ந்தவர் கர்நாடகா மதுபானக்கடை அருகே வெட்டிக்கொலை

தேன்கனிகோட்டையை சேர்ந்தவர் கர்நாடகா மதுபானக்கடை அருகே வெட்டிக்கொலை
X

பைல் படம்

தேன்கனிகோட்டையை சேர்ந்தவர் கர்நாடகா எல்லைக்கு சென்று மதுபானம் குடிக்க சென்ற போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை உளிபெண்டா கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் நேற்று மாலை கர்நாடகா மாநிலம் கனகாபுரா அருகே உன்சனஹள்ளி பகுதியிலுள்ள கர்நாடகா மாநில தனியார் மதுபான கடைக்கு மதுகுடிக்க சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற 6 பேர் கொண்ட மர்மநபர்கள் சங்கரை மதுபானக்கடை அருகே அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதனையடுத்து கொலையாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த கர்நாடகா மாநில போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து கர்நாடகா போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உளிபெண்டா கிராமத்தை சேர்ந்த சென்னகிருஷ்ணன் என்பவர் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உளிபெண்டா கிராமத்தில் டிராக்டரை மோதவிட்டு தலைமேல் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் சங்கர் இரண்டாவது எதிரியாக சேர்க்கப்பட்டு சிறைக்கு சென்றார். சென்னகிருஷ்ணன் கொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கர்நாடகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

இதனிடையே தேன்கனிக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருத்திகா தலைமையில் இன்று தேன்கனிகோட்டை காவல்துறையினர் கொலை நடந்த உன்சனஹள்ளி மதுபான கடை மற்றும் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!