ஆஸ்துமா நோயால் அவதி... கூலித்தொழிலாளி தற்கொலை
X
By - K.Rajeshwari,Reporter |24 April 2021 1:45 PM IST
கெலமங்கலம் அருகே, ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த சி.தம்மாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்னையா. கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார்.
ஆஸ்துமாவுக்காக, பல்வேறு இடங்களில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று சி.தம்மாண்டரப்பள்ளியில் உள்ள ராமைய்யா ஏரிப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு, அன்னையா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu