தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் நடமாட்டத்தால் நெற்பயிர்கள் சேதம்

தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் நடமாட்டத்தால்  நெற்பயிர்கள் சேதம்
X
யானைகள் இரவு எஸ்.குருபட்டி பகுதியில் ஆனந்த்பாபு என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தின

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் நெற்பயிர்கள் நாசம் அடைந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்குள் வந்துள்ளன. அந்த யானைகள் மூன்று குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள் சுற்றி திரிகின்றன. இதில் 10 யானைகள் சேர்ந்த யானைக்கூட்டம் ஒன்று தேனிக்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளது.

இந்த யானைகள் இரவு எஸ்.குருபட்டி பகுதியில் ஆனந்த்பாபு என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்தன. அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் யானைகள் மிதித்து சேதமடைந்தன. இதை கண்ட ஆனந்த்பாபு தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் சேதடைந்த பயிர்களை பார்வையிட்டு உரிய இழப்பிடு வழங்குவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்