கணவன்-மனைவி தகராறு; கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கணவன்-மனைவி தகராறு; கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

தளி அருகே கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தளி அருகே உள்ள சம்பங்கிமாரதொட்டியை சேர்ந்தவர் ராஜா என்கிற ராஜ்குமார். கூலித் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தகறாறில், மனமுடைந்த ராஜா தனது வீட்டிலேயே விஷத்தை குடித்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
why is ai important to the future