இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து, கூலித்தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து, கூலித்தொழிலாளி உயிரிழப்பு
X

சாலை விபத்தில் இறந்த கூலி தொழிலாளி (பைல் படம்)

ராயக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவர் இவருக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் மாலை ராயக்கோட்டை கெலமங்கலம் சாலையில் உள்ள நெல்லூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அரசு பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த அவர் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ. சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!