தேன்கனிக்கோட்டை அருகே வெள்ளப்பெருக்கு: 5 கிராமங்கள் துண்டிப்பு

தேன்கனிக்கோட்டை  அருகே வெள்ளப்பெருக்கு: 5 கிராமங்கள் துண்டிப்பு
X

அடவி சாமிபுரம் கிராமம் அருகே ஆற்றுநீர் செல்வதால் அங்கு உள்ள தரைபாலம் மூழ்கடித்து தண்ணீர் செல்கின்றது. 

தேன்கனிக்கோட்டை அருகே நேற்று இரவு பெய்த கன மழையால் 5ஆண்டுகளுக்கு பின் வெள்ளப்பெருக்கு 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.

தேன்கனிக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது விட்டு விட்டு லேசான மழையும், அடைமழையும் பெய்து வருகின்றது. ஏரி குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. அடை மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள ராகி பயிர்கள் அழுகும் நிலை உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு தேன்கனிக்கோட்டை பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அதில் தேன்கனிக்கோட்டையில் 99மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கனமழையால் தளி அருகே உற்பத்தியாகும் சனத்குமார் ஆற்றில் 5ஆண்டுகளுக்கு பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தளி ஊராட்சி ஒன்றியம் தண்டரை ஊராட்சி அடவி சாமிபுரம் கிராமம் அருகே ஆற்றுநீர் செல்வதால் அங்கு உள்ள தரைபாலம் மூழ்கடித்து தண்ணீர் செல்கின்றது. தரைபாலம் மூழ்கடித்து செல்வதால் அடவிசாமிபுரம், மேல்சாமிபுரம், ஜாகீர், சீராம்புரம், வெங்கடாபுரம் ஆகிய கிராமங்கள் துண்டிக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் சுற்றி தேன்கனிக்கோட்டை வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள கிராம மக்கள் தெரிவிக்கையில் பாலத்தை உயர்த்திகட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம் என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!