ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: கல்லறைக்கு மலர் தூவி வழிபாடு

ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி: கல்லறைக்கு மலர் தூவி வழிபாடு
X

பூக்காளால் அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையின் சமாதி.

ஜல்லிக்கட்டு காளைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் சாமந்தி மலர்களால் அலங்கரித்திருந்தது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள பூனபள்ளி கிராமத்தில் பிஎம்சி கரியான் என்ற ஜல்லிக்கட்டு காளை இந்த பகுதியில் புகழ்பெற்றது. இளம் கன்றுகுட்டியிலிருந்து வளர்க்கப்பட்ட காளைமாடு கிராமத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது. மாநிலத்தில் பல மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட எருது விடும் விழாவில் கலந்துகொண்டு பரிசுகளை வாங்கி குவித்தது.

கெலமங்கலம் பூனபள்ளி கிராமத்திற்கு பெருமை தேடித்தந்த பிஎம்சி கரியன் தொடர்ந்து கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்தது. இந்த நேரத்தில் தான் செல்லமாக வளர்க்கப்பட்ட பிஎம்சி கரினுக்கு உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆண்டு இதே நாளில் பரிதாபமாக இறந்தது. பின்பு ஊர்மக்கள் ஒன்றுகூடி ஊர்வலமாக டிராக்டரில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.

அந்த காளையின் நினைவு நாள் இன்று கிராமத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. சாமந்தி மலர்களால் அலங்கரித்து நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future