கெலமங்கலகம் அருகே யானைகள் நடமாட்டம்: ரயில்களின் வேகத்தை குறைக்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் தற்போது தஞ்சமடைந்து உள்ளது. வனப்பகுதியில் உள்ள யானைகள் இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கெலமங்கலம் பகுதியில் உள்ள ரயில்வே பாதையை கடந்து யானைகள் மற்றொரு பகுதிக்கு செல்கிறது. அவ்வாறு செல்லும்போது யானைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு ரயிலின் வேகத்தை குறைக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு மாவட்ட வன அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏன்னெனில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் கோவை மாவட்டத்தில் ரயில் பாதையை கடந்தபோது நான்கு யானைகள் உயிரிழந்தது.
இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஓசூரில் உள்ள ரயில்வே நிலையங்களுக்கு யானைகள் கடக்கும் பகுதியில் வேகத்தை 25 முதல் 30 கிலோமீட்டர் வரை மட்டுமே இயக்க வேண்டும் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வாட்ஸ்அப் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேகக்கட்டுப்பாடு ஆனது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu