தேன்கனிக்கோட்டை அருகே காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே காட்டுயானை தாக்கி முதியவர் உயிரிழப்பு
X

தேன்கனிகோட்டை அருகே யானை தாக்கி பலியானவரின் குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்கிய அதிகாரிகள். 

கிருஷ்ணகிரி மாவட்டம், பச்சப்பனட்டி கிராமத்தில் காட்டுயானை தாக்கி முதியவர் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள பச்சப்பனட்டி கிராமத்தை சேந்தவர் விவசாயி வெங்கடேசப்பா (65). இவர் இன்று காலை கடன்களை கழிப்பதற்காக, அருகேயுள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த காட்டுயானை , முதியவர் வெங்கடேசப்பாவை துரத்தி சென்று மிதித்து தாக்கியுள்ளது.

இதில், உடலில் பலத்த காயங்கள் அடைந்த வெங்கடேசப்பா, சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். ஏரிக்கரையோரத்தில் முதியவர் வெங்கடேசப்பா உயிரிழந்து கிடப்பதை பார்த்த கிராமமக்கள், அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேன்கனிகோட்டை வனத்துறையினர் மற்றும் கெலமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்திற்கு சென்ற அதிகாரிகள், உயிரிழந்து கிடந்த வெங்கடேசப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரணம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!