தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு
X
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தொட்டமஞ்சி ஊராட்சி கெம்பகரை கிராமத்தில் வசிப்பவர் மாதையன் மகன் கண்ணன்(46). விவசாயி. இவர் நேற்றிரவு கிராமத்து அருகே கெம்பகரை வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள விவசாய நிலத்திற்கு காவல் சென்றுள்ளார்.

இன்று காலை ஆகியும் கண்ணன் வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள் கண்ணனை தேடி சென்ற போது வயலில், யானை மிதித்து உடல் சிதறி இறந்து கிடந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் பிரகாஷ் மற்றும் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடம் சென்று இறந்து கிடந்த கண்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை மிதித்து விவசாயி உயரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!