மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
X
தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்/

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குல்சார். இவர் கடந்த சில மாதங்களாகவே சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார் ஓசூர் கிருஷ்ணகிரி பெங்களூர் உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் தனது உறவினரான மதகொண்டபள்ளி பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் இருந்து வந்துள்ளார்.

இன்று மாலை திடீரென அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது உறவினர் நயாஸ் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீஸ் எஸ்ஐ தமிழ்மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!