துணை வட்டாச்சியருக்கு கொரோனா பாதிப்பு : அலுவலகம் மூடல்

துணை வட்டாச்சியருக்கு கொரோனா பாதிப்பு : அலுவலகம் மூடல்
X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அஞ்செட்டி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை வட்டாச்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அலுவலகம் மூடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே அஞ்செட்டி தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டு கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் மற்றும் அங்கு வந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை முடிவில் அவர்களுக்கும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தால் அவர்களையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக வட்டாட்சியர் தேவயானி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!