கல்லூரி மாணவி மாயம்: கூலித்தொழிலாளி கடத்தியதாக பெற்றோர் போலீசில் புகார்

கல்லூரி மாணவி மாயம்: கூலித்தொழிலாளி கடத்தியதாக பெற்றோர் போலீசில் புகார்
X

பைல் படம்.

தளி அருகே 19 வயது கல்லூரி மாணவியை கூலித் தொழிலாளி ஒருவர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. இவர் கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது பெற்றோர் தளி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தளி அடுத்த ஜெயந்தி காலனி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான மது என்பவர் கடத்திச் சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தளி போலீஸ் எஸ்ஐ கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்