அஞ்செட்டி அருகே தீவிபத்தில் சிக்கிய பெண் குழந்தை உயிரிழப்பு

அஞ்செட்டி அருகே தீவிபத்தில் சிக்கிய பெண் குழந்தை உயிரிழப்பு
X

பைல் படம்.

அஞ்செட்டி அருகே வைக்கோல் போரில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த 2 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பையில் காடு என்ற கிராமத்தில் மாரிமுத்து ஜோதி என்ற தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது ஒரு பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை மூன்று குழந்தைகள் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த வைக்கோல் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அருகே இருந்த தீப்பெட்டியை எடுத்து விளையாட்டாக ஒரு குழந்தை பற்ற வைத்துள்ளது. இதில் வைக்கோல் எரியும்போது இரண்டு குழந்தைகள் தப்பித்து ஓடினர். ஆனால் வைக்கோலில் இருந்த ஒரு குழந்தை மட்டும் 2வயது விஷாலினி பலத்ததீக்காயம் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இச்சம்பவம் தொடர்பாக அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai future project