சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முரளி. (பெயிண்டர்). இவர் 17 வயது சிறுமியை கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்கச் சென்ற உறவினர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.
இது குறித்து சிறுமியின்பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டனர். மேலும் முரளியை கைது செய்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில்நடைபெற்றது. நீதிபதி லதா இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளிக்கு, சிறுமியை கடத்தியதற்காக ஐந்து ஆண்டுகள் சிறையும், சிறுமி உறவினர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஐந்து ஆண்டுகளும், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக, 10ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுதரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜராகி வாதாடினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu