அஞ்செட்டி பகுதியில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானை

அஞ்செட்டி பகுதியில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானை
X

அஞ்செட்டி அருகே உள்ள வனப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் ஆனந்த குளியல் போடும் ஒற்றை காட்டு யானை.

அஞ்செட்டி வனப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானையை மக்கள் கண்டு ரசித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் நீர்நிலைகளைத் தேடி செல்கின்றன.

வனப்பகுதியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நீர் தொட்டி மற்றும் மழைநீர் குட்டையில் விலங்குகள் நீரை குடித்து செல்கின்றன.

இந்நிலையில், தளி அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள வனப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் ஒற்றை காட்டு யானை ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தது. இதனை அப்பகுதியில் செல்பவர்கள் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!