தேன்கனிகோட்டை அருகே தனியார் ரிசார்ட்டில் ஆபாச நடனம்: பெண் உட்பட 11 பேர் கைது

தேன்கனிகோட்டை அருகே தனியார் ரிசார்ட்டில் ஆபாச நடனம்: பெண் உட்பட 11 பேர் கைது
X

ஆபாச நடமாடியதாக கைது செய்யப்பட்ட 11 பேர்.

தேன்கனிகோட்டை அருகே தனியார் ரிசார்ட்டில் ஆபாச நடனமாடிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை அருகே கர்நாடகா மாநில எல்லையான ஆனெக்கல் அடுத்துள்ள தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நடன நிகழ்ச்சியில் பெங்களுரு பகுதியில் வேலைபார்த்து வரும் ஐடி கம்பெனி பணியாளர்கள், மாணவர்கள், பெண்கள் என 40 பேர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இரவில் மது மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்தி ஆபாச நடனம் ஆடியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆனெக்கல் காவல்துறையினருக்கு ரகசிய கிடைத்துள்ளது. தொடர்ந்து அந்த தனியார் ரிசார்ட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு நடனமாடி கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்த பெரும்பாலானோர் தப்பியோடியுள்ளனர். இதில் ஒரு பெண் உள்பட 11 பேர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். இதனையடுத்து 11 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் இந்த ஆபாச நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தப்பியோடிய மற்றவர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய மதுபான பாட்டில்கள் மற்றும் போதைப்பொருட்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!