கிருஷ்ணகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் கைது: 200 லிட்டர் ஊரல் அழிப்பு

கிருஷ்ணகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் கைது: 200 லிட்டர் ஊரல் அழிப்பு
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, 200 லிட்டர் ஊரலை அழித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதியில் காட்டுக்கொல்லை கிராமம் பாறைக்குழி என்ற மலையடிவாரத்தில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் நாகரசம்பட்டி போலீஸார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை அவர்கள் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் கேன், பாட்டில்கள் மற்றும் 200 லிட்டர் ஊரல் ஆகியவற்றை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கொட்டி அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story