திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக கிராமத்தில் இருந்து நகர பகுதிகளுக்கு வரும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையை போக்கிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறந்து மக்களின் தாகத்தை தீர்க்க உத்தரவிட்டார்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில், திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும், அம்மா மினரல் வாட்டர் உரிமையாளருமான செந்தில்குமார் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூராட்சி தலைவரும், முன்னாள் பேரூர் திமுக செயலாளருமான விவேகானந்தன் இந்த தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசணி பழம் என சுமார் 300 பேருக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!