கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, இன்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, பர்கூர் தாசில்தார் குருநாதன், தேன்கனிக்கோட்டை தாசில்தாராகவும், ஓசூர் கோட்ட ஆய அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும், போச்சம்பள்ளி தாசில்தார் முருகேசன், அஞ்செட்டி தாசில்தாராகவும், கிருஷ்ணகிரி கோட்ட ஆய அலுவலர் வடிவேல், எண்ணேகோள் அணைக்கட்டின் வலது மற்றும் இடது புறங்களில் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்காக நில எடுப்பு அலகில் தனி தாசில்தாராகவும், அஞ்செட்டி தாசில்தார் சரவணன், கிருஷ்ணகிரி தாசில்தாராகவும், தேன்கனிக்கோட்டை தாசில்தார் இளங்கோ, போச்சம்பள்ளி தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல் கிருஷ்ணகிரி அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் சுப்பிரமணி, ஓசூர் குளோபல் சால்சியம் லிட் ஆய் மேற்பார்வை அலுவலராகவும், எண்ணேகோள் அணைகட்டின் வலது மற்றும் இடது புறங்களில் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு நில எடுப்பு அலகில் தனி தாசில்தாராக பணிபுாந்த சின்னசாமி, டாஸ்மாக் கிடங்கு மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் குளோபல் கால்சியம் லிட் ஆய் மேற்பார்வை அலுவலர் திலகம், கிருஷ்ணகிரி அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும், கிருஷ்ணகிரி தாசில்தார் பிரதாப், பர்கூர் தாசில்தாராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தண்டபாணிக்கு, கிருஷ்ணகிரி கோட்ட ஆய அலுவலர் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் தாசில்தார்கள் பணி நியமனம் செய்யப்பட்ட புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேரவும் அறிவுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu