1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்கிய தொழிலதிபர்
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் கொரோனா நிவாரண மளிகை பொருட்களை வழங்கினார்.
காவேரிப்பட்டணத்தில் வெங்கடசாமி - பழனியம்மாள் குடும்பத்தினர் சார்பில் 1000 குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண மளிகை பொருட்களை எஸ்பி பண்டிகங்காதர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த தொழிலதிபரான வெங்கடசாமி, பழனியம்மாள் குடும்பத்தினர் சார்பில் வறுமையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 1000 குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான தலா ரூ.1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில், 10 கிலோ அரிசி, உப்பு, நெய், ஊளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, கோதுமை மாவு, வறுகடலை, ரவை தலா ஒரு கிலோ, சமையல் எண்ணெய் 1 லிட்டர், பெரிய வெங்காயம், உருளைகிழங்கு, சேமியா, புளி, 10 முககவசங்கள், பால்கோவா உள்ளிட்டவை இருந்தது.
மேலும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இடத்தில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் ஆயிரம் குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். 2வது நாளான இன்று 500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கே.எம். சுப்ரமணி வரவேற்றார். கே.என்.கற்பூரசிவன், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.எம்.சுவாமிநாதன் தலைமை வகித்தார்
இவ்விழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர் கலந்து கொண்டு,500 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண மளிகை பொருட்களை வழங்கினார். அப்போது, தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.
இதுதொடர்பாக கே.வி.எஸ்.சீனிவாசன் கூறும்போது, முதற்கட்டமாக தலா ரூ-.1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்களபணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம் என்றார்.
கடந்த ஆண்டும் கொரோனா ஊராடங்கின் போது வாழ்தவாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கே.வி.எஸ்.சீனிவாசன், ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu