ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி

ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி
X

ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி.

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

குடியரசு தின நாளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அவமரியாதை செய்ததோடு மட்டுமில்லாமல் திமிராக பேசியதற்கும் கண்டனம் தெரிவித்தார். துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாசுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே பிஜேபி தான் பிரதான எதிர்க்கட்சி என குருமூர்த்தி மற்றும் பிஜேபியின் முன்னணி தலைவர்கள் முன்மொழிந்ததையே நயினார் நாகேந்திரன் வழிமொழிந்து உள்ளார். எனவே நயினார் நாகேந்திரன் இவ்வாறாகவே பேச வேண்டும் என புகழேந்தி வலியுறுத்தினார்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சொந்த பணம் செலவு செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த புகழேந்தி நிச்சயமாக ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறுவது என்பது கடினம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!