பகுதி நேர கடைகள் திமுக ஆட்சியில் தொடங்க பட்டது : கைத்தறி துறை அமைச்சர்
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் 68 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்றது.
நியாயவிலை கடைகளின் சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பகுதி நேர கடைகள் திமுக ஆட்சியில் தொடங்க பட்டது என்றார் மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி.
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் 68 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்றது. இதில் மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கலந்துக் கொண்டு 869 பயனாளிகளுக்கு பயிர்கடனாக 657 நபர்களுக்கு 4 கோடி ரூபாய், 205 மகளிர் உதவிய குழுக்கள் உறுப்பினர்களுக்கு 92 லட்சம் ரூபாய் உள்ளிட்ட 8 வகையான நலத் திட்ட உதவிகள் என மொத்தம் 5 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கூட்டுறவு துறை மூலமாக ஏழைகள் , விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனர். கூட்டுறவு சங்கங்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழக அரசு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைகடன் தள்ளுபடி, ரேசன் உணவு பொருட்கள், கொரோனோ நிவாரண நிதி, பயிர்கடன் , மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அனைத்து வகையான மக்களும் ரேசன் உணவு பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில் 100 குடும்ப அட்டைகள் உள்ள மலை கிராமங்களிலும் நடமாடும் நியாயவிலை கடைகள் செயல்படுத்த பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் தான் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயவிலை கடைகளின் சேவைகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் 150 குடும்ப அட்டைகள் உள்ள இடங்களில் பகுதி நேர நியாயவிலை கடைகள் தொடங்கப்பட்டது. அதன்மூலம் நியாயவிலை கடைகளின் சேவைகள் பரவலாக மக்களை சென்று சேர்ந்தது. திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார் அமைச்சர் காந்தி. இதன் பின்னர் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.
இதில், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, கூட்டுறவு இணை பதிவாளர் ஏகாம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu