கிருஷ்ணகிரியில் இன்று அமைச்சா் காந்தி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து

கிருஷ்ணகிரியில் இன்று அமைச்சா் காந்தி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து
X

அமைச்சர் காந்தி பங்கேற்ற விழா (பைல் படம்)

கிருஷ்ணகிரியில் இன்று அமைச்சா் காந்தி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, இன்று பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தலைமையில் கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய பேட்டை முருகன் கோயில் சாலை அருகேயும், மீனாட்சி மஹால் திருமண மண்டபத்திலும், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகேயும், நாகோஜனஅள்ளி பேரூராட்சி, என்.தட்டக்கல், ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் அருகிலும், பா்கூா் பேரூராட்சி ஆகிய இடங்களில் நடைபெற இருந்த சிறப்பு குறை தீா்க்கும் முகாம்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நிா்வாக காரணத்துக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!