சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்: கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்:  கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்
X

கிருஷ்ணகிரியில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

கிருஷ்ணகிரியில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி நகரில் சந்தைபேட்டை, சேலம் சாலை, பழையபேட்டை, ராயக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் விழும் கழிவுகள் அனைத்தையும் சில கடைகளின் உரிமையாளர்கள் சிமெண்ட் பைகளில் கட்டி இரவு நேரங்களில் நீர்நிலைகளின் ஓரங்களிலும், சாலைகளின் ஓரங்களில் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளின் ஓரங்களில் துர்நாற்றம் வீசுகிறது.

தற்போது கிருஷ்ணகிரி நகரில் இருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையின் இடதுபுறம் இந்த கழிவுகளை அதிக அளவில் மூட்டை மூட்டையாக கட்டி வந்து போட்டு சென்றுவிடுகின்றனர். இங்கு தனியார் பள்ளி ஒன்றும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலையின் வழியாக தான் மாவட்ட ஆட்சியர், எஸ்பி., உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் தினமும் சென்று வருகின்றனர். ஆனால் அவர்கள் இதை ஏனோ கண்டும் காணாமல் போய்விடுகின்றனர்.

இதனால் மழை காலங்களில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு, அந்த கழிவுகளை நாய்கள், பன்றிகள் தின்னும்போது, காற்று பலமாக வீசும் போது, சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது விழுகின்றது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

தற்போது கொரோனா அச்சத்தில் பொதுமக்கள் உள்ள நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இறைச்சி கடைகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி கடைகளில் விழும் கழிவுகளை தினமும் அப்புறப்படுத்தி, வேறு இடங்களில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!