கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது
X

கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் 

கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துதுறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக வணிகவரி, பத்திரபதிவுத்துறை அரசு முதன்மை செயலாளருமான டாக்டர் பீலாராஜேஷ் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறியதாவது:-

கொரோனாஇரண்டாவதுஅலை பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். 5 கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் மூலம், நேற்று முன்தினம் வரை பரிசோதனை செய்யப்பட்ட 3 லட்சத்து 5 ஆயிரத்து 90 நபர்களில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 656 நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

17 ஆயிரத்து 434 நபர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, 14 ஆயிரத்து 843 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 451 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 122 கட்டுப்பாட்டு மண்டலங்கள் 3 ஆயிரத்து 63 கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 20 கிலோ லிட்டர் ஆக்சிஜன் உள்ளது. நாளொன்றுக்கு 4.07 கிலோ லிட்டர் பிராணவாயு பயன்படுத்தப்படுகிறது. 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட 518 சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளது. இதில் 175 சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. முன்கள பணியாளர்கள், 45 வயதிற்கு உட்பட்டவர்கள் என ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 194 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது 9 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

மாவட்டத்தில் 7 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுகாதார துறை, வருவாய் துறை, காவல் துறை இணைந்து பிற மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்