கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 371 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று சிகிச்சையில் குணமடைந்து 268 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 ஆயிரத்து 975 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2 ஆயிரத்து 902 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!