ஊழியருக்கு கொரோனா: கிருஷ்ணகிரி பிடிஓ அலுவலகம் மூடல்

ஊழியருக்கு கொரோனா: கிருஷ்ணகிரி பிடிஓ அலுவலகம் மூடல்
X
ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கிருஷ்ணகிரி பிடிஓ அலுவலகம் மூடப்பட்டது.

கிருஷ்ணகிரி நகரில், பெங்களூர் சாலையில் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளநிலை உதவியாளராக ஓசூரை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரு தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.

இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலம் பூட்டப்பட்டது. முன்னதாக அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நேற்று பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து சுகாதாரத்துறை சார்பில் கூறுகையில், இளநிலை உதவியாளருடன் பணிபுரியும் சக அலுவலர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால், உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; தேவைப்பட்டால் மருத்துவரை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!