18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி தற்போது இல்லை

18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி தற்போது இல்லை
X
கிருஷ்ணகிரியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி தற்போது போடப்படுவதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று வரை மருந்துகள் வராததால் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி திட்டமிட்டபடி இன்று துவங்காது. மற்றபடி 45 வயது நிரம்பியோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 5 லட்சம் பேர் இருப்பதாகவும், அதில் நேற்று வரை சுமார் ஒரு லட்சத்து 45 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு வருவதாகவும் கூறினர்.

மத்திய, மாநில அரசுகளின் அடுத்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 18 வயது வந்தோருக்கு தடுப்பூசி போடுவதற்கு இன்று வரை அதற்கான தடுப்பூசி மருந்துகள் வரவில்லை. வந்தவுடன், பதிவு செய்துள்ளவர்கள் வரிசையின் படி தடுப்பூசி போடும் பணி துவங்கும் என்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது