பெங்களூரில் இருந்து அரசு பேருந்தில் கடத்தப்பட்ட 4 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து அரசு பேருந்தில் கடத்தப்பட்ட 4 மூட்டை குட்கா பொருட்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்.

பெங்களூரிருந்து சேலத்திற்கு 4 மூட்டைகளில் கடத்திச் சென்ற குட்கா பொருட்களை கிருஷ்ணகிரி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி இன்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தில் ஏறிய மர்ம நபர்கள் 2 பேர் தங்களை துணி வியாபாரி எனக் கூறி, 4 மூட்டைகளில் துணிகள் உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து துணி மூட்டைகளை பேருந்தில் ஏற்றியவர்கள் சேலத்திற்கு டிக்கெட் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்த போது, பயணிகளிடம் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்தார். அப்போது மூட்டையில் என்ன உள்ளது என கேட்டபோது, பேருந்தில் இருந்த 2 பேரும் கீழே இறங்கி தப்பியோடினர்.

இதில் சந்தேகமடைந்த டிக்கெட் பரிசோதகர், அங்கு புறநகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் பேருந்தில் இருந்த மூட்டையில் சோதனை செய்த போது குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து 4 மூட்டை குட்கா பொருட்களை இன்று பறிமுதல் செய்த, கிருஷ்ணகிரி டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!